/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விவசாய நிலங்களில் சாய்ந்த மின்கம்பத்தால் விவசாயிகள் அச்சம்
/
விவசாய நிலங்களில் சாய்ந்த மின்கம்பத்தால் விவசாயிகள் அச்சம்
விவசாய நிலங்களில் சாய்ந்த மின்கம்பத்தால் விவசாயிகள் அச்சம்
விவசாய நிலங்களில் சாய்ந்த மின்கம்பத்தால் விவசாயிகள் அச்சம்
ADDED : மார் 30, 2025 03:57 AM

சிவகாசி : சிவகாசி அருகே எரிச்சநத்தம், குமிழங்குளம் பகுதியில் விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களாலும், தாழ்வாகச் செல்லும் மின் வயர்களாலும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி அருகே எரிச்சநத்தம், குமிழங்குளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சோளம், பருத்தி, நெல் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றது. இந்த விவசாய நிலங்களின் வழியாக மின்சாரம் வினியோகம் செய்வதற்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உயர் அழுத்த மின் வயர் வழியாக மின்சாரம் செல்கின்றது.
விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின் வயர்களும் தாழ்வாகச் செல்கின்றது. பெரிய மழை பெய்யும் போது மின்கம்பம் சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்துடனே விவசாய பணிகளை செய்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.