/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாய்ந்த நிலை மின்கம்பங்கள் அச்சத்தில் விவசாயிகள்
/
சாய்ந்த நிலை மின்கம்பங்கள் அச்சத்தில் விவசாயிகள்
ADDED : மார் 24, 2025 06:23 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பி.ராமச்சந்திரபுரத்தில் விவசாய நிலங்களில் சாய்ந்து நிற்கும் மின்கம்பங்களால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதனை மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
இக்கிராமத்தை சுற்றி பல நூறு ஏக்கர் பரப்பளவில் ஏராளமான விவசாயிகள் பருத்தி, மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் கூட்டுறவு வங்கி பின்புறம் உள்ள விவசாய நிலங்களில் உள்ள மின் கம்பங்கள் படிப்படியாக சாய்ந்து வருகிறது. தற்போது இதன் மின் ஒயர்கள் தாழ்வாக தொங்கி வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் விவசாயிகள் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, விபரீத சம்பவங்கள் நிகழும் முன்பு மின் கம்பங்களை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.