/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
யானைகள் நடமாட்டம் விவசாயிகள் அச்சம்
/
யானைகள் நடமாட்டம் விவசாயிகள் அச்சம்
ADDED : அக் 13, 2025 05:42 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார தோப்புகளில் புகுந்து யானைகள் தென்னைகளை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக யானைகள் நடமாட்டம் இல்லாத நிலையில் தற்போது சில நாட்களாக செண்பகத் தோப்பு மலையடிவார பகுதிகளில் யானைகள் மாலை நேரங்களில் வந்து செல்கிறது. நேற்று முன்தினம் மாலை அத்திதுண்டு செக் போஸ்ட் பகுதியில் யானைகள் புகுந்து ஒரு சில தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனர். வனச்சரகர் செல்வமணி கூறுகையில், ஒரு சில யானைகள் அடிவாரத்தோப்புகளில் மாலை நேரங்களில் நடமாடுகிறது. இதனை விரட்ட கூடுதல் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.