/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் நரிக்குடி விவசாயிகள் திண்டாட்டம்
/
வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் நரிக்குடி விவசாயிகள் திண்டாட்டம்
வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் நரிக்குடி விவசாயிகள் திண்டாட்டம்
வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் நரிக்குடி விவசாயிகள் திண்டாட்டம்
ADDED : நவ 12, 2025 11:58 PM
நரிக்குடி: நரிக்குடி பகுதியில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகள் முழுக்க விவசாயம் சார்ந்து உள்ளன. எங்கு பார்த்தாலும் செழுமையாக இருக்கும்.
100 நாள் வேலைத்திட்டம் ஏற்படுத்தப்பட்ட பின் விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.
விவசாயிகள் பலர் விவசாயம் செய்வதை விட்டு விட்டனர். பெரும்பாலான பகுதிகள் தரிசு நிலங்களாக கிடப்பதுடன், சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன.
அடுத்தடுத்து விளை நிலங்களில் பரவி, சீமை கருவேல மரங்கள் முளைப்பதால் அப்புறப்படுத்த படாதபாடு படு கின்றனர்.
பெரும்பாலானவர்கள் விவசாயத்தை விட மனமில்லாமல் தொடர்ந்து விவசாயம் செய்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆட்கள் பற்றாக்குறை பிரச்னை இருந்து வருகிறது. இருந்தாலும் விவசாயத்தை விடாமல் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை பெய்து, நாத்து நடவு, கம்பு, சோளம், பருத்தி, எள், உளுந்து உள்ளிட்ட பல்வேறு மானாவாரி விவசாயத்தை செய்தனர். ஓரளவிற்கு நன்கு முளைத்து வளர்ந்து வருகின்றன.
அத்துடன் களைகள் முளைத்துள்ளதால் , பயிர்களை அழுத்தி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்படும் முன் களைகளை அப்புறப் படுத்த விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காததால் கலக்க மடைந்துள்ளனர்.
எம்.ஜி. என்.ஆர். ஜி. எஸ்., திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை பயன்படுத்துவதுபோல், விவசாய நேரத்தில் விவசாய பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

