/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பார்த்தீனிய களைச்செடிகள் அதிகரிப்பு கட்டுப்படுத்த எதிர்பார்க்கும் விவசாயிகள்
/
பார்த்தீனிய களைச்செடிகள் அதிகரிப்பு கட்டுப்படுத்த எதிர்பார்க்கும் விவசாயிகள்
பார்த்தீனிய களைச்செடிகள் அதிகரிப்பு கட்டுப்படுத்த எதிர்பார்க்கும் விவசாயிகள்
பார்த்தீனிய களைச்செடிகள் அதிகரிப்பு கட்டுப்படுத்த எதிர்பார்க்கும் விவசாயிகள்
ADDED : அக் 07, 2024 04:49 AM
ராஜபாளையம்: தோட்டங்கள், விவசாய விளைநிலங்களுக்குள் பரவி வளர்ந்து உள்ள விஷத்தன்மை உள்ள பார்த்தீனியம் களைச் செடிகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் சுற்றுவட்டார விளைநிலங்கள், குடியிருப்புகள், கண்மாய், ஓடை, பாசன பகுதி என அனைத்து இடங்களிலும் களைச் செடிகளுடன் பார்த்தீனியம் எனும் விஷச்செடி படர்ந்து விவசாயிகள், கால்நடை, குடியிருப்போருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பூக்களின் மூலம் வெடித்து விதை பரவலாக பெருகும் இவற்றை முழுமையாக பிடுங்கினாலும் பல ஆண்டுகளுக்கு பின்னும் விதைகள் உறங்கி மீண்டும் முளைக்கும் திறனாக உள்ளதால் கட்டுப்படுத்த முடியாத அளவு பரவி விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நெல், தென்னை, பருத்தி, கரும்பு, மிளகாய் என எந்த ஒரு பயிர் சூழலிலும் போட்டியிட்டு வளரும் தன்மை கொண்டுள்ளது. இச்செடியின் இலை, பூ, விதை என மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒவ்வாமை எனும் தோல் நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து விவசாயி ராமர்: இந்த விஷச் செடியை சுலபமாக அழிக்க முடியவில்லை. விவசாய நிலங்களில் பல்கி பெருகியுள்ள இவை மனிதர்களின் கால்களில் படும் போது தடிப்புகளும், நுரையீரலில் ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழக அரசால் முன்பு பார்த்தீனிய ஒழிப்பு இயக்கம் என்ற ஒருங்கிணைந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி போல் மீண்டும் கட்டுப்படுத்தும் நடைமுறையை அரசு பரிசீலிக்க வேண்டும்.

