/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
களத்தில் காலியாகும் நெல் மூடைகள் மகிழ்ச்சியில் விவசாயிகள்
/
களத்தில் காலியாகும் நெல் மூடைகள் மகிழ்ச்சியில் விவசாயிகள்
களத்தில் காலியாகும் நெல் மூடைகள் மகிழ்ச்சியில் விவசாயிகள்
களத்தில் காலியாகும் நெல் மூடைகள் மகிழ்ச்சியில் விவசாயிகள்
ADDED : பிப் 13, 2025 06:29 AM

சேத்துார்: சேத்துார் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை நெல் மூடைகளை 20 நாட்களாகியும் வெளியேற்றாததால் அறுவடைக்கு தாமதமாகி வருவதாக விவசாயிகள் வேதனை அடைந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து லாரிகளில் நெல் மூடைகள் ஏற்றப்பட்டது.
சேத்துார் சுற்றுவட்டார பகுதியில் கண்மாய் பாசன விவசாயிகள் நுாற்றுக்கணக்கான ஏக்கர் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து ஏமாற்றம் அடைவதை தடுக்க அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வாரம் ஒரு முறை விவசாயிகளிடம் பெற்ற நெல்லுக்கு அவரவர் கணக்கில் தொகை செலுத்தப்பட்டது.
பல்வேறு காரணங்கள் கூறி சேத்துார் மாரியம்மன் கோயில் அருகே, மலையடிவாரம் செல்லும் பாதை இரண்டு இடங்களில் கொள்முதல் செய்யப்படும் களங்களில் சுமார் 6000 மூடைகள் வரை தேக்கம் அடைந்ததுடன் அதற்கான தொகையும் வரவு வைக்கப்படவில்லை.
களத்தில் இடம் இல்லாததால் நெல் அறுவடையையும் நிறுத்தி வைத்தும் ஏற்கனவே தேங்கிய நெல்லை பாதுகாக்க வழியின்றி விவசாயிகள் வேதனையில் தவித்தனர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டதையடுத்து நேற்று காலை முதலே தேங்கி இருந்த நெல் மூடைகளை லாரிகளில் ஏற்றும் பணி தொடங்கியது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்..

