/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொடர் மழையால் நெல் பயிரிட்ட விவசாயிகள் வேதனை
/
தொடர் மழையால் நெல் பயிரிட்ட விவசாயிகள் வேதனை
ADDED : ஜன 09, 2024 12:41 AM
ராஜபாளையம், : ராஜபாளையத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் தொடர்ந்து செய்து வரும் பருவம் தவறிய மழையால் நெல் பயிரிட்ட விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
ராஜபாளையத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. ஒரு நாள் இரவு, ஒரு நாள் பகல், மற்றொரு நாள் கனத்த மழை என தொடர்ந்து வருவதால் தலை சாய்ந்த நிலைக்கு பயிர்கள் சென்று வருகிறது. இத்துடன் வானிலை அறிக்கையும் ஒரு வாரத்திற்கு பரவலான மழை அறிவிப்பு வெளியிட்டுள்ளது .
இந்த ஆண்டு பெரும்பாலான கண்மாய்கள் நிறைந்து மறுகால் பாய்ந்து வரும் நிலையில் நெற்பயிர்கள் கதிர் விட்டு கடைசி கட்டத்தை நெருங்கி உள்ளது.
பருவம் தவறிய இத்தொடர் மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் பயிர்கள் மண்ணில் சாய்ந்து வருகிறது. இத்துடன் கண்மாயில் அதிகரித்து வெளியேறும் நீரால் தாழ்வான கடைமடை பகுதிகள், கண்மாய் ஒட்டிய பாசனபகுதிகளில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயி கதிரேசன்: ஓரிரு மழை என்றால் சமாளித்து விடலாம். ஜன. மாதத்தில் இது போன்ற தொடர் மழை இந்த ஆண்டு விவசாயிகளை பெரிதும் பாதித்து வருகிறது. அறுவடையை எதிர்பார்க்கும் நேரத்தில் ஏற்படும் நஷ்டத்தை எவ்வாறு சமாளிப்பது என்ற வேதனையில் உள்ளோம், என்றார்.