ADDED : ஜன 24, 2025 04:15 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: காலிப்பணியிடங்களை ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நிரப்புவதை ரத்து செய்வது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் விருதுநகரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் எஸ்தர் தலைமை வகித்தார். மாநில பெருளாளர் சுப்புக்காளை, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன், முன்னாள் துணை தலைவர் கண்ணன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் உட்பட பலர் பேசினர். மாலை 5:00 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர்.
