/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்
/
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்
ADDED : ஜன 11, 2024 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் சி.பி.எஸ்., கருணை தொகையும், மாற்றுத்திறனாளி ஊர்திப்படியும் நிறைவேற்றி தருவதாக ஒப்புக் கொண்டதை இதுவரை நிறைவேற்றாத சூழ்நிலையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமை வகித்தார். கிளை தலைவர்கள் பாலசுப்பிரமணியன், மாரியப்பன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கணேசன் வரவேற்றார்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன், சத்துணவு ஊழியர் சங்க மாநில பொருளாளர் சுப்புக்காளை, அரசு ஊழியர் சங்க முன்னாள் துணை தலைவர் கண்ணன் பேசினர்.

