ADDED : ஆக 17, 2026 05:41 PM
சிவகாசி, ஆக.
19-
சிவகாசி சாட்சியாபுரத்தில் பட்டாசு தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் பட்டாசு தொழிலை பாதுகாத்திட வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் விவேகன் ராஜ், இந்திய கம்யூ., தாலுகா செயலாளர் கலைவாசகன் தலைமை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் செந்தில்குமார் பேசினர். ஆய்வு என்ற பெயரில் கெடுபிடி செய்து பூட்டிய பட்டாசு தொழிற்சாலைகளை உடனே திறந்து, தொழிலாளர்களுக்கு வேலை வழங்கி, வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். மீனவர்களுக்கு, மீன்பிடி தடைகாலங்களில் வழங்கப்படும் நிவாரணத்தை போன்று, விபத்து ஏற்படும் காலங்களில் பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பசுமை தீர்ப்பாணையம் உத்தரவு படி, பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்தில் இறந்த தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
