/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெம்பக்கோட்டை வைப்பாறு பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து அச்சம்
/
வெம்பக்கோட்டை வைப்பாறு பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து அச்சம்
வெம்பக்கோட்டை வைப்பாறு பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து அச்சம்
வெம்பக்கோட்டை வைப்பாறு பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து அச்சம்
ADDED : பிப் 23, 2024 05:24 AM

சாத்துார், : வெம்பக்கோட்டை வைப்பாறு பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்கதால் விபத்து அச்சத்தில் வாகனஓட்டிகள் சென்று வருகின்றனர்.
வெம்பக்கோட்டையில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் வைப்பாறு மேம்பாலத்தில் தடுப்புச் சுவர்கள் சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் ஆற்றில் விழுந்து விபத்திற்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தென்காசிக்கு செல்லும் ரோட்டில் தினந் தோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசு பொருட்கள் மற்றும் தீப்பெட்டி, காலண்டர், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் துாத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு லாரிகள் மற்றும் கண்டெய்னர் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
மேலும் கட்டுமான பொருட்களுக்கு தேவையான சிமென்ட் கம்பிகள் எம் சாண்ட் மணல் போன்றவையும் லாரிகள் மூலம் இந்த பாலம் வழியாக தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது இதனால் காலை முதல் மாலை வரை இந்த ரோடு போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
வெம்பக்கோட்டை வைப்பாறு மேல் உள்ள பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த பாலத்தில் பக்கவாட்டு துாண்கள் சேதமடைந்து இடிந்து விட்டன.
இதனால் தடுப்பு சுவர் இல்லாமல் காணப்படுகிறது. இரு வாகனங்கள் செல்லும் போது கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் பயணம் செய்கினறனர். பாலத்தின் பக்கவாட்டில் தடுப்பு சுவர் அல்லது தடுப்பு கம்பி அமைக்கவேண்டும். இதன் மூலம் வாகனங்கள் விபத்திற்குள்ளாவது தடுக்கப்படும்.