/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
லாரிகளில் அதிக பாரங்களை ஏற்றுவதால் அச்சம்! விதி மீறுவோர் மீது நடவடிக்கை தேவை
/
லாரிகளில் அதிக பாரங்களை ஏற்றுவதால் அச்சம்! விதி மீறுவோர் மீது நடவடிக்கை தேவை
லாரிகளில் அதிக பாரங்களை ஏற்றுவதால் அச்சம்! விதி மீறுவோர் மீது நடவடிக்கை தேவை
லாரிகளில் அதிக பாரங்களை ஏற்றுவதால் அச்சம்! விதி மீறுவோர் மீது நடவடிக்கை தேவை
ADDED : ஆக 05, 2024 07:28 AM
மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. சரக்குகளை கையாள அதிக அளவில் கனரக லாரிகள் வந்து செல்கின்றன. விருதுநகரில் எண்ணெய், பருப்பு, வத்தல் உள்ளிட்ட சரக்குகள் ஏற்றி இறக்கப்படுகின்றன. சிவகாசியில் அதிக அளவில் உற்பத்தியாகும் பட்டாசுகள் வெளி மாநிலங்களுக்கு ஏற்றிச் செல்கின்றனர்.
சாத்துாரில் தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்கள், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் பகுதிகளுக்கு காட்டன், தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கனரக வாகனங்களில் அதிக அளவில் ஏற்றி செல்கின்றனர். அதே போல் மதுரை - துாத்துக்குடி, கன்னியாகுமரி நான்கு வழிச்சாலைகளில் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து கிரானைட், கெமிக்கல் பவுடர், நிலக்கரி உள்ளிட்ட பொருட்களை அதிக அளவில் ஏற்றி இந்த வழியாக கடந்து செல்கின்றனர்.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு எடை உள்ள பொருட்களை ஏற்றி செல்வதால் விபத்து அச்சம் உள்ளது. கனரக வாகனங்களில் 8, 12, 16 வீல்கள் கொண்ட லாரிகளில் அதிகபட்சமாக 18 டன் லோடு ஏற்ற வேண்டும். பெரும்பாலானவர்கள் விதி மீறி 25 டன் வரை ஏற்றுகின்றனர். ஒரு டன் எடை கூடினால் ரூ. 22 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம். அதிக அளவில் எடை ஏற்றினால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் பெயரளவில் ஆய்வு செய்து, கண்டும் காணாமல் இருக்கின்றனர்.
இதை சாதகமாக பயன்படுத்தி லாரி உரிமையாளர்கள் லாபம் கருதி அதிக பாரம் ஏற்றி செல்ல முற்படுகின்றனர். எடை மையங்களிலும் எடை அளவை குறைத்து போலி எடைச்சீட்டுகளை வழங்குகின்றனர். அவ்வப்போது அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்து கூடுதலாக இருக்கும் சரக்குகளை இறக்கி அபராதம் விதித்து வேறு வாகனத்தில் ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து அச்சத்தால் ஓட்டுனர்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விதி மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.