/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி - நரிக்குடி ரோட்டில் இரு வளைவுகளில் நடக்கும் விபத்தால் அச்சம்

ADDED : அக் 29, 2025 07:46 AM

காரியாபட்டி: காரியாபட்டி நரிக்குடி ரோட்டில் வளைவுகளால் அடிக்கடி நடக்கும் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். நேர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
காரியாபட்டியில் இருந்து நரிக்குடி 30 கி.மீ., தூரம் உள்ளது. முடுக்கன்குளம், எஸ். மரைக்குளம், பனைக்குடி உள்ளிட்ட பெரிய ஊர்களும், அதனை ஒட்டி ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். இந்நிலையில் எஸ். கடமங்குளம், தேனூர் அருகே மிக ஆபத்தான வளைவு உள்ளது.
வேகமாக வரும் வாகனங்கள் வளைவில் திரும்ப முடியாமல் விபத்தில் சிக்குகின்றன.
இரவு நேரங்களில் டூவீலரில் வருபவர்கள் வளைவு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குவது, தொடர்கதையாக இருந்து வருகிறது. ஏற்கனவே ஏராளமான வாகனங்கள் விபத்தில் சிக்கி பல உயிர் பலி ஏற்பட்டுள்ளன.
இரு வளைவுகளைக் கடக்க வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும் விபத்து ஏற்படுவதற்கு முன் வளைவை நிமிர்த்தி நேராக ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.