ADDED : பிப் 07, 2024 12:23 AM
விருதுநகர் : விருதுநகரில் பிப். 10ல் பெரிய அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து சாத்துார் ஸ்ரீராமசாமி நாயுடு நினைவுக் கல்லுாரியில் நடக்க உள்ளது.
இதில் டி.வி.எஸ்., ஆனமலை டொயோட்டா, சென்னை ஐ.ஐ.எப்.எம்., புளு ஓசன் சென்னை, ராயல் என்பீல் போன்ற நுாற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை கல்வி தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த முகாமின் நேர்காணலில் கலந்து கொள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை அனைத்து கல்விச்சான்றுகளின் நகல், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை கலந்து கொண்டு பயன்பெறலாம்.
பங்கேற்க வரும் முன் https://bit.ly/3UdoeJY என்ற கூகுள் பார்ம் பதிவு செய்து கொள்ள வேண்டும். எனவே விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம், என்றார்.
