தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பணி சுமையால் அவதிப்படும் பெண் தூய்மை பணியாளர்கள்

பணி சுமையால் அவதிப்படும் பெண் தூய்மை பணியாளர்கள்

பணி சுமையால் அவதிப்படும் பெண் தூய்மை பணியாளர்கள்


UPDATED : ஆக 05, 2026 04:26 PM

ADDED : ஆக 05, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2026 04:26 PM ADDED : ஆக 05, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ஊராட்சியில் பெண் தூய்மை பணியாளர்களே அனைத்து விதமான பணிகளை செய்ய வேண்டி இருப்பதால் பணி சுமையால் அவதிப்படுகின்றனர்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சியில் புறநகர் பகுதிகள் அதிகமாக உள்ளதால் அடிப்படை வசதிகள் இல்லாமலும் தூய்மை பணிகள் செய்ய முடியாமலும் ஊராட்சி திணறுகிறது. சுகாதாரப் பிரிவில் பெண் பணியாளர்கள் அதிக அளவில் உள்ளனர். ஊராட்சி முழுவதும் பெண் பணியாளர்கள் தான் குப்பையை வாங்குவது, சேகரிப்பது, வாகனத்தில் கொட்டுவது, தள்ளு வண்டியை இழுத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டியுள்ளது. கடினமான பணிகளையும் இவர்களே செய்ய வேண்டி இருப்பதால் பணிச்சுமை அதிகமாக உள்ளது. தினசரி குப்பைகளை அள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். ஊராட்சி முழுவதும் குப்பை தேங்கி கிடக்கிறது.

ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பாலையம்பட்டி ஊராட்சிக்கு ஆண் தூய்மை பணியாளர்களை கூடுதலாக பணியில் அமர்த்தி குப்பை அள்ளும் பணிகளை தொய்வு இல்லாமல் நடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us