ADDED : ஜூலை 01, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் வெங்கடாசலபதி கோயில் ஆனிப்பெருந் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது.
தாசில்தார் ராஜாமணி தலைமை வகித்தார். டி.எஸ்.பி.நாகராஜன், இன்ஸ்பெக்டர் கமல் முன்னிலை வகித்தனர். ஆனித் தேரோட்டம் திருவிழா ஜூலை 10-ல் நடைபெறுவதை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
சாத்துார் சுற்று கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ,தொழிலதிபர்கள் மற்றும் வருவாய் துறையினர் நகராட்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.