ADDED : ஆக 04, 2025 03:52 AM

அ நிறம் | அளவு
காரியாபட்டி: காரியாபட்டி நாசர் புளியங்குளத்தில் ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு, சடச்சியம்மன் கோயிலில் உள்ள ஊர்காவலன், கருப்பசாமி, பேச்சியம்மன் உட்பட 21 பரிவார தெய்வங்களுக்கு உற்ஸவ விழா நடந்தது.
சடச்சியம்மனுக்கு 21 அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதில் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
