/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விடுபட்ட இணைப்பு வழங்க கள ஆய்வு பணி துவக்கம்
/
விடுபட்ட இணைப்பு வழங்க கள ஆய்வு பணி துவக்கம்
ADDED : ஜூன் 03, 2025 12:35 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் விடுபட்ட கட்டடங்களுக்கு இணைப்பு வழங்க திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான கள ஆய்வு துவங்கியது.
ராஜபாளையம் நகராட்சியில் கார்பன் நியூட்ரல், மாஸ்டர் பிளான் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ராம்கோ கம்யூனிட்டி சர்வீசஸ் தன்னார்வ நிறுவனம் சார்பில் நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து ஒவ்வொரு வீடு, கட்டடம் வாரியாக நகரின் ஒட்டுமொத்த தகவல்களை அறிவியல் பூர்வமாக ஆவணப்படுத்துவதற்காக மார்ச் மாதம் டிஜிட்டல் சர்வே எடுக்கும் பணிகள் நடந்தது.
500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று இதற்கான பிரத்தியேக செயலி மூலம் தகவல்களை சேகரித்தனர். இதன் தரவுகளை குடிநீர் வழங்கல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
சர்வே தகவல்கள் அடிப்படையில் விடுபட்ட பாதாள சாக்கடை இணைப்புகளை முறைப்படுத்தவும் புதிய இணைப்புகளை வழங்கவும் நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்காக நகராட்சி நிர்வாகம் ராம்கோ கம்யூனிட்டி சர்வீஸ் இணைந்து கள ஆய்வுப் பணி துவங்கியுள்ளது நகராட்சி தலைவர் பவித்ரா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மயில்வாகனன், கமிஷனர் நாகராஜ் பணிகளை துவங்கி வைத்தனர். தன்னார்வலர்கள், மாணவர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.