ADDED : ஆக 09, 2025 11:35 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் நிதி விழிப்புணர்வு, நுகர்வோர் பயிற்சி என்ற சொற்பொழிவு கல்லுாரி முதல்வர் சாரதி, துறைத் தலைவர் செந்தில் தலைமையில் நடந்தது.
தேசிய நிதி கல்வி மையத்தில் பட்டியலிடப்பட்ட நிதி கல்வி பயிற்சியாளர் முத்து கோபாலகிருஷ்ணன் பேசினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மஞ்சு மகாலட்சுமி செய்தார்.
