தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டியவர்களுக்கு அபராதம்

குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டியவர்களுக்கு அபராதம்

குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டியவர்களுக்கு அபராதம்


UPDATED : நவ 26, 2026 06:04 PM

ADDED : நவ 26, 2026 06:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 06:04 PM ADDED : நவ 26, 2026 06:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரில் குப்பை, இறைச்சிக் கழிவுகளை கொட்டியவர்களுக்கு நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

விருதுநகர் நகராட்சி உட்பட்ட 36 வார்டுகளிலும் குப்பை 4 வகையாக தரம் பிரித்து வழங்கும் முறை தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள், வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை உருவாகும் இடத்திலே மக்கும், மக்காத குப்பை, சுகாதார கழிவு, சிறப்பு பராமரிப்பு கழிவு என 4 வகையாக தரம் பிரித்து வீடு தேடி வரும் துாய்மை பணியாளரிடம் வழங்க வேண்டும். இந்நிலையில் நேற்று சுகாதார பிரிவினர் ஆய்வு நடத்தினர். இதில் மாத்தநாயக்கன்பட்டி ரோட்டில் உள்ள உரக்கிடங்குகளுக்குச் செல்லும் வழியில் குப்பையை கொட்டிய நபருக்கு ரூ.3 ஆயிரமும், இறைச்சிக் கழிவுகளை கொட்டிய ஒருவருக்கு ரூ.1000 என ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் நகராட்சி சுகாதார அலுவலர் பழனிசாமி, சுகாதார ஆய்வாளர் தமிழ்செல்வன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us