தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திடக்கழிவுகளை தீயிட்டு கொளுத்தியவர்களுக்கு அபராதம் 

 திடக்கழிவுகளை தீயிட்டு கொளுத்தியவர்களுக்கு அபராதம் 

 திடக்கழிவுகளை தீயிட்டு கொளுத்தியவர்களுக்கு அபராதம் 


ADDED : பிப் 09, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 04:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் திடக்கழிவுகள்தீயிட்டு கொளுத்தினால் அபராதம் விதிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தும் பல ஊராட்சிகள் கண்டுக்காததால் காற்று மாசு அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் ரோட்டோரங்களிலும், பொது இடங்களிலும் குப்பை, இதர திடக்கழிவுகள் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு திடக்கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் சுற்றுச்சூழல், உடல் நலம் பாதிக்கப்படும். நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவுகளை அகற்ற போதிய ஏற்பாடுகள் செய்யவும், திடக்கழிவு சேவையில் ஈடுபட்டு சுகாதாரம் பேணி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செலவினத்தை அதன் பொறுப்பாளர்களிடம் இருந்து பணம் வசூலித்து செயல்படுத்தவும், நச்சுத் தன்மை உடைய கழிவுகளையோ, அழுகிய கழிவுகளையோ, மலக்கழிவுகளையோ, மருத்துவக்கழிவுகளையோ மாற்றம் செய்தல், கழிவு நீர்க் கால்வாய்களில் கொட்டுதல் ஆகியவை தடைசெய்யப்படுகிறது. இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை, அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது, என முந்தைய கலெக்டர் ஜெயசீலன் சுற்றறிக்கை வழங்கினார்.

இதை எந்த உள்ளாட்சி அமைப்புகளுமே பின்பற்றுவதில்லை. தற்போது பொங்கல் பண்டிகையின் போது வீடு சுத்தம் செய்யும் போது எடுத்த பழைய பொருட்களை நகராட்சி பகுதியில் தினசரி வாங்க வரும் குப்பை வண்டியில் கொடுத்து விட்டனர். ஆனால் ஊரக பகுதிகளிலோ அதற்கான ஏற்பாடு ஏதுமில்லை. தற்போதைய கலெக்டர் சுகபுத்ரா போகியின் போது காற்று மாசு ஏற்படுத்தும் வகையில் பொருட்களை எரிப்பதை தவிர்ப்ப தற்காக உள்ளாட்சி நிர்வாகங்கள் பழைய கழிவு பொருட்களை பெற அறிவுறுத்தினார்.

அதையும் செயல்படுத்தவில்லை. இந்நிலையில் பழைய கழிவு பொருட்கள், பிளாஸ்டிக் குப்பையை எரித்து விட்டனர். காற்று மாசு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பொங்கல் விடுமுறைக்கு பின், திடக்கழிவுக்கு அபராதம் விதிக்காத உள்ளாட்சி அமைப்புகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us