ADDED : மார் 24, 2026 04:51 AM
அ நிறம் | அளவு
காரியாபட்டி: காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே நைனார் முகமதுக்கு சொந்தமான ஜவுளிக்கடை பின்புறம் உலர்ந்த கொடிகள், குப்பைகள் குவிந்து கிடந்தன.
இதில் தீ பற்றி மளமளவென பரவியது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக தண்ணீர் ஊற்றினர்.
புகை மண்டலமானது. பின் காரியாபட்டி தீயணைப்பு வீரர்கள் முற்றிலும் அணைத்தனர். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். பொருட்கள் எதுவும் சேதம் இல்லை.
