சாப்டூர் வனச்சரக மலையில் 2ம் நாளாக எரிந்த காட்டுத்தீ
சாப்டூர் வனச்சரக மலையில் 2ம் நாளாக எரிந்த காட்டுத்தீ
ADDED : செப் 27, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இரண்டாம் நாளாக காட்டுத்தீ எரிந்து வருகிறது.
வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகத்திற்கு இடைப்பட்ட பெருமாள் கோவில் மொட்டை மலையில் நேற்று முன்தினம் மாலை
பிடித்த காட்டு தீ கொளுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு தீயை அணைக்க சென்றனர்.
ஆனால், இம்மலைப்பகுதி வறண்ட பாறையும், நாணல் புற்களும், ஈரத்தன்மை இல்லாத பகுதி என்பதால், தீயை அணைப்பது சவாலான விஷயமாகும்.
இதனால் இரண்டாம் நாளாக நேற்றும் காட்டுத்தீ எரிந்தது. வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
