ADDED : பிப் 11, 2026 06:53 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் சிவகார்த்திகை செல்வம் 42. இவர் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி
விற்பனை செய்கிறார். புல்லலக்கோட்டை ஊருக்கு வெளியே பிளாஸ்டிக் கழிவுகளை பிரிக்கும் குடோவுன் வைத்துள்ளார். நேற்று மதியம் யாரோ அணைக்காமல் வீசி சென்ற பீடித்துண்டு புற்களில் தீப்பிடித்து குடோவுனில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.
