நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி தீயணைப்பு நிலையம் சார்பாக தீ தொண்டு வாரத்தை யொட்டி ஆவியூர் அருகே தனியார் கம்பெனியில், திருச்சுழி நிலைய அலுவலர் சந்திரசேகரன், காரியாபட்டி நிலைய அலுவலர் (பொறுப்பு) சசிகுமார் முன்னிலையில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு, தீ தடுப்பு ஒத்திகை குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அப்துல் பாசித், அன்பரசன் செய்து காண்பித்தனர். துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.