ADDED : மே 24, 2026 03:25 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் ஸ்டேட் வங்கி கிளையின் பின் பகுதி பழைய ஆவணங்கள் வைப்பு அறையில் தீப் பிடித்தது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர் ஸ்டேட் வங்கி கிளையின் பின் பகுதியில் முதல் தளத்தில் பழைய ஆவணங்களை வைத்துள்ள ஸ்டோர் ரூம் உள்ளது. இந்த அறையில் நேற்று மதியம் 2:00 மணிக்கு மின் கசிவினால் தீப்பிடித்தது.
மேலும் பழைய ஆவணங்களில் தீ பரவியது. தீயணைப்பு துறையினர் 3 வாகனங்களில் வந்து ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். நேற்று 4வது சனிக்கிழமை என்பதால் வங்கி விடுமுறையாக இருந்ததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
