ADDED : பிப் 16, 2026 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: திருச்சுழி கொட்டம் கிராமத்தைச் சேர்ந்த பூமி. நரிக்குடி மயிலி பகுதியில் வயல்களில் அறுவடை செய்யப்பட்டிருந்த வைக்கோல்களை இவருக்கு சொந்தமான டிராக்டரில் ஏற்றி வந்தார்.
அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின் ஒயர் உரசியதில் தீப்பற்றி எரிந்தது. திருச்சுழி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த னர்.
வைக்கோல்கள் மட்டும் எரிந்தன. டிராக்டரை தீ விபத்திலிருந்து பாதுகாக்கப்பட்டது.
நரிக்குடி, திருச்சுழி காட்டுப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மின் ஒயர்கள் மிகவும் தாழ்வாக செல்கின்றன.
எடை குறைவாக உள்ள வைக்கோல், பருத்தி, கடலை உள்ளிட்டவற்றை வாகனங்களில் அதிக அளவில் பாரம் ஏற்றி வருவதால் மின் ஒயரில் உரசி அடிக்கடி தீ விபத்து நடக்கிறது.
அதிக பாரம் ஏற்றுவதை போலீசார் கண்காணித்து தடுக்க வேண்டும்.

