ADDED : ஆக 28, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
திருச்சுழி, ஆக. 2ar
திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருச்சுழி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு முறைகள், பாதுகாப்பு முறைகள், தீ பற்றியவுடன் எவ்வாறு அணைப்பது, முதலுதவிகள் உள்ளிட்ட முறைகளை செயல் விளக்கத்துடன் மாணவர்களுக்கு விளக்கினர்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
---
