ADDED : பிப் 03, 2026 05:59 AM
சிவகாசி: சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரியில் ஏ.சி.ஐ.சி., மெப்கோ இனோவேடிவ் பவுன்டேஷன் சார்பில் இரு நாட்கள் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு, செய்முறை பயிற்சி பணிமனை நடந்தது. கல்லுாரி இயந்திரவியல் துறை பேராசிரியர் அழகு ராஜன், மூத்த உதவி பேராசிரியர் பிரகாஷ், தீ பாதுகாப்பு அடிப்படைகள் குறித்த பயிற்சி வழங்கினர்.
தீ அபாயங்கள், தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. 2வது நாளில் சென்னை பாரத் பெட்ரோலியம் மூத்த மேலாளர் ஜெயபிரகாஷ், தமிழ்நாடு தீ, மீட்பு சேவைகள் நிலைய தீயணைப்பு அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். விருதுநகர் மாவட்டம் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஸ்டார்ட் அப் ஆர்வலர்கள், புதிய தொழில் முனைவோர்களுக்கு தீ பாதுகாப்பு, அவசரகால நடவடிக்கைகள், பாதுகாப்பான நடை முறைகள் குறித்து விழிப்புணர்வு உருவாக்குவதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

