ADDED : ஏப் 28, 2026 04:09 AM
அ நிறம் | அளவு
சிவகாசி: தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கமான 'டாப்மா' செயலர் மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை:
பட்டாசு தொழிலை பொறுத்தவரை, சல்பர், அத்தியாவசிய மூலப்பொருட்கள் கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. இதனால், உற்பத்தி செயல்பாடுகள், முறையாக நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், கிடைக்கும் மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொழிலை நடத்துவதற்கான செலவுகள் மிகவும் உயர்ந்துள்ளன.
தற்போதைய அதிகமான வெப்பநிலை காரணமாக, தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்துள்ளன. தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பட்டாசு உற்பத்தி தற்காலிகமாக, மே 4 வரை நிறுத்தப் படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
