/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உயிரிழப்பு 10 ஆக உயர்வு

UPDATED : மே 09, 2024 09:28 PM
ADDED : மே 09, 2024 03:10 PM

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆறு பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் இன்று (மே 9) திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்குள்ள 7 அறைகள் தரைமட்டமாகின. இந்த வெடி விபத்தில் 4 ஆண்கள், 6 பெண்கள் என 10 பேர் உயிரிழந்தனர், 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.