sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 அட்டைமில் குடோனில் பட்டாசு தயாரிப்பு: கைது 6

/

 அட்டைமில் குடோனில் பட்டாசு தயாரிப்பு: கைது 6

 அட்டைமில் குடோனில் பட்டாசு தயாரிப்பு: கைது 6

 அட்டைமில் குடோனில் பட்டாசு தயாரிப்பு: கைது 6


ADDED : ஜன 29, 2026 05:42 AM

Google News

ADDED : ஜன 29, 2026 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் அனுமதி இன்றி அட்டை மில் குடோனில் பட்டாசு தயாரித்த ஆலை உரிமையாளர், பீகார் தொழிலாளர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

வத்திராயிருப்பு அருகே மாவூத்து ரோட்டில் ராஜபாளையம் ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான செயல்படாத அட்டை மில் குடோனில், கோட்டையூர் வருவாய் ஆய்வாளர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் நேற்று சோதனை செய்தனர்.

அப்போது அங்கு அரசு அனுமதி இல்லாமல் உயர் ரக பட்டாசுகளை தயாரிப்பது தெரிய வந்தது. ஆலை உரிமையாளர் திருத்தங்கல் மோகன் 50, பீகார் தொழிலாளர்கள் ரோகித் குமார் 27, அஜய்குமார் 25, விஜய் மாஞ்சி 32, குண்டுமாஞ்சி 33, சோட்டு மாஞ்சி 32, ஆகியோரை பிடித்தனர்.

பின்னர் குடோனில் இருந்த 6 பட்டாசு பெட்டிகளையும், மூலப் பொருட்களையும் அங்கேயே வைத்து சீல் வைத்தனர். பிடிபட்டவர்களையும் ஒரு கார், ஒரு வேனையும் வத்திராயிருப்பு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் ராஜகோபால் உட்பட 7பேர் மீது வழக்கு பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us