ADDED : ஏப் 29, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் குல்லுார்சந்தை காளிஸ்வரி 37. இவர் தன் வீட்டருகே சாக்குப் பை ஒன்றை கொண்டு சென்றார். அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற எஸ்.ஐ., லதா குமாரி, சந்தேகத்தின் பேரில் அதனை சோதனையிட்டார்.
அதில் விதிமுறைகளை மீறி உரிமம் ஏதுமின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படும் வெள்ளைத் திரிகள் 30 பண்டல்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து காளிஸ்வரியை கைது செய்தார்.

