/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சீல் வைத்த குடோனில் பட்டாசுகள் திருட்டு: உரிமையாளர் மீது வழக்கு
/
சீல் வைத்த குடோனில் பட்டாசுகள் திருட்டு: உரிமையாளர் மீது வழக்கு
சீல் வைத்த குடோனில் பட்டாசுகள் திருட்டு: உரிமையாளர் மீது வழக்கு
சீல் வைத்த குடோனில் பட்டாசுகள் திருட்டு: உரிமையாளர் மீது வழக்கு
ADDED : ஜன 06, 2026 05:41 AM
சாத்துார்: வெம்பக்கோட்டையில் வருவாய் துறையினர் சீல் வைத்த குடோனில் இருந்த பட்டாசுகள் திருட்டு போனது குறித்து உரிமையாளர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வெம்பக்கோட்டை கணஞ்சாம்பட்டியை சேர்ந்தவர் வி. ஏ. ஒ.,சக்தி கணேசன் 39. 2025 ஆக.10ல் வி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த கணேச பாண்டியனின் தகர செட்டை திடீர் சோதனை செய்தபோது அங்கு அரசு அனுமதி இன்றி,சரவெடிகள் மொத்தம் 195 பெட்டிகளும்,முழுமை அடையாத சரவெடிகளும்,வெள்ளை திரி 4 குரோஸ், முழுமை அடையாத ஆயிரம் வாலா சரவெடிகள் அடங்கி 53 பெட்டிகளும், 2 பெட்டிகளில் முழுமை அடையாத பூச்சட்டி வெடிகள் இருப்பது தெரிய வந்தது. வருவாய்த் துறையினர் தகர செட்டிற்கு சீல் வைத்தனர். சாவியை வெம்பக் கோட்டை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கு சாத்துார் ஜே. எம். 2 நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் காலையில் நீதிமன்ற உத்தரவுபடி நீதிமன்ற தலைமை எழுத்தர் சம்பவ இடத்திற்கு சென்று பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளை பார்வையிட சென்ற போது தகர செட்டில் இருந்த பட்டாசுகள் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.
அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை வைத்து நிலத்தின் உரிமையாளர் கணேச பாண்டியன் தகர செட்டின் ஸ்குரூக்களை கழட்டி பட்டாசுகளை திருடியது தெரிய வந்தது. வி.ஏ.ஒ. சக்தி கணேசன் புகார் படி வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

