/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொழிலாளர் நல நிதி தருவதில் பட்டாசு ஆலைகள் சுணக்கம் விழிப்புணர்வை அதிகப்படுத்த எதிர்பார்ப்பு
/
தொழிலாளர் நல நிதி தருவதில் பட்டாசு ஆலைகள் சுணக்கம் விழிப்புணர்வை அதிகப்படுத்த எதிர்பார்ப்பு
தொழிலாளர் நல நிதி தருவதில் பட்டாசு ஆலைகள் சுணக்கம் விழிப்புணர்வை அதிகப்படுத்த எதிர்பார்ப்பு
தொழிலாளர் நல நிதி தருவதில் பட்டாசு ஆலைகள் சுணக்கம் விழிப்புணர்வை அதிகப்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : பிப் 21, 2024 06:27 AM
விருதுநகர் : தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி தருவதில் பட்டாசு ஆலைகள் சுணக்கம் காட்டுவதால், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதல் நிதி கிடைப்பது கானல் நீராகிறது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ராமுதேவன்பட்டி பட்டாசு விபத்தில் 10 பேர் பலியாகினர். இதில் முதல்வர் நிவாரணமாக ரூ.3 லட்சம் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய நிதியில் இருந்து ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் கூடுதலாக வழங்கப்பட்டது. இதுவரை நடந்த பட்டாசு விபத்துக்களில் இதுவே முதல் முறை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட ஆலை தொழிலாளர் ஒருவருக்கு ரூ.40 வீதம் ஆண்டுதோறும் தொழிலாளர் நல நிதிக்கு செலுத்தி வந்துள்ளதால் தற்போது உடனடியாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் தொழிலாளர் தரப்பிலும் ரூ.20 செலுத்தப்படும்.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த வரையில் இது குறித்த விழிப்புணர்வு பல பட்டாசு ஆலைகளுக்கு சென்றடையவில்லை. அப்படியே விழிப்புணர்வு இருந்தாலும் பலரும் தயக்கம் காட்டுகின்றனர். மேலும் இவ்வாறு செலுத்தப்படும் போது உண்மையில் ஆலையில் எத்தனை பேர் பணிபுரிவர் என்பது தெரிய வரும் என்பதாலும் பலரும் சுணக்கம் காட்டுகின்றனர். 5 பேருக்கு மேல் பணிபுரியும் அனைத்து அமைப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களில் பணிபுரியும்தொழிலாளர்களுக்கும் நல நிதி செலுத்துவது அவசியம்.
இதே போல் பணியாளர் இழப்பீடு சட்டத்தில் இ.எஸ்.ஐ., பொருந்தாத ஒரு தொழில் நிறுவனத்தில்ஒரு தொழிலாளி, வேலை பார்க்கும் போது இறந்து விட்டால் வேலை அளிப்பவர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இதற்கு இறந்தவரின் குடும்பத்தார் தொழிலாளர் இழப்பீட்டு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து இறப்பவரின் வயதை கணக்கிட்டு பணிபுரியும் திறன் உள்ளவயது வரை உள்ள இழப்பீட்டை பணமாக பெறலாம். இந்த சட்டத்தின் படி விபத்து ஊனம் ஏற்பட்டாலும் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும்.
இது குறித்தும் பட்டாசு தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வுஇல்லாமல் உள்ளது. பெரும்பாலான தொழிலாளர் இழப்பீட்டு ஆணையத்தைநாடுவதே கிடையாது.
மதுரை தொழிலாளர் துறை இணை ஆணையர் சுப்பிரமணியன் கூறியதாவது: 2020 டிச. 30ல் பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்நல வாரியம் அமைக்கப்பட்டது. இதில் 39 ஆயிரத்து 583 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
அனைத்து பட்டாசு ஆலைகளும் தொழிலாளர் நல நிதி செலுத்த முன்வர வேண்டும். அதே போல்விபத்தில் பாதிக்கப்பட்டோர் தயங்காமல் தொழிலாளர் இழப்பீட்டு ஆணையத்தை அணுக வேண்டும்.பதிவு பெற்ற அமைப்பு சாராபட்டாசு தொழிலாளர்களுக்கு தகுதியான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

