/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போனஸ் கேட்டு பட்டாசு ஆலை வாகனம் சிறைபிடிப்பு
/
போனஸ் கேட்டு பட்டாசு ஆலை வாகனம் சிறைபிடிப்பு
ADDED : நவ 11, 2025 03:23 AM

சிவகாசி: சிவகாசியில் வருங்கால வைப்பு நிதி முறையாக செலுத்தாததாலும், போனஸ் தொகை வழங்காததாலும் பட்டாசு ஆலை வாகனத்தை தொழிலாளர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை பார்க்கும் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி முறையாக செலுத்தவில்லை, போனஸ் தொகை வழங்கவில்லை. இதுகுறித்து தொழிலாளர்கள் ஆலை நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் செங்கமலப்பட்டி பகுதி வழியாக வந்த பட்டாசு ஆலை நிர்வாகத்தின் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சிவகாசி கிழக்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வாகனத்தை அனுப்பி வைத்தனர்.

