ADDED : மே 07, 2025 01:32 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் நர்சிங் கல்லூரியில் இதயம், நுரையீரல் இயக்க முதலுதவி பயிற்சி முகாம் நடந்தது.
முதல்வர் கலா முன்னிலை வகித்தார். ஜெனிபர் பிரசில்லா வரவேற்றார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் வாழ்த்தினர்.
முதலுதவி மாஸ்டர் அலெக்ஸ் இதயம், நுரையீரல் இயக்கம் தடைபடுதல், மின்சாரம் தாக்குதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கைகளால் அழுத்தம் செய்து அபாய கட்டத்தை தாண்டும் பயிற்சி அளித்தார்.
முகாமில் பேராசிரியர்கள் தங்க சுப்புலட்சுமி, நாகமுத்து, மாணவர்கள் பங்கேற்றனர். ராமலட்சுமி நன்றி கூறினார்.
