ADDED : ஆக 27, 2026 06:53 PM
சிவகாசி, ஆக. 28-
சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் 2026 - 27 ம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
பி.எஸ்.ஆர்., கல்வி குழுமங்கள் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். டீன் மாரிசாமி துவக்கி வைத்தார். சென்னை மனநல ஆலோசகர் டாக்டர் ரகுநாத், கல்லுாரி வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறையுடன் எதிர்கொள்வது, மனநலத்தை பேணுவது, கல்வியில் கவனம் செலுத்துவது குறித்தும், சென்னை அண்ணா பல்கலை பேராசிரியர் நிர்மல் குமார், உயர் கல்வியின் முக்கியத்துவம், திறன் மேம்பாடு, புதுமை சிந்தனை குறித்தும் பேசினர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த இறுதி ஆண்டு மாணவர்கள் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற அனுபவங்கள் குறித்து விளக்கினர். முதலாம் ஆண்டு துறை தலைவர் ஸ்ரீராம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்தனர்.
