தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அணை மதகில் ஷட்டரை சரி செய்யுங்க

அணை மதகில் ஷட்டரை சரி செய்யுங்க

அணை மதகில் ஷட்டரை சரி செய்யுங்க


ADDED : அக் 25, 2024 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 04:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி அருகே ஆனைக்குட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அணை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 27 அடி உயரம் கொண்ட அணையில் 9 மதகுகள் உள்ளது. திருத்தங்கல் செங்கமலப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, வடமலாபுரம், முதலிப்பட்டி, வாடியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 3003 ஹெக்டர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதியாக உள்ளது. இதனை நம்பி நெல், வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது.

ஆனால் தற்போது ஒரு ஹெக்டர் பாசன வசதி கூட இல்லை மேலும் விருதுநகர், திருத்தங்கல் நகரங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. ஆனால் எவ்வளவு மழை பெய்தாலும் இதுவரையிலும் அணை நிரம்பியது இல்லை.

மழையால் தண்ணீர் வந்தவுடன் மதகுகளில் ஷட்டர் பழுதால் தண்ணீர் வீணாக வெளியேறிவிடும். மேலும் அணை பலவீனமாக இருப்பதால் கடந்த காலங்களில் 18 அடி உயரம் வரை தண்ணீர் வந்ததும் அதனை தேக்க முடியாமல் அணையின் பாதுகாப்பு கருதி வீணாக வெளியேற்றப்படுகின்றது.

சமீபத்தில் இப்பகுதியில் மழை பெய்து அணைக்கு தண்ணீர் வந்தும் அதனை தேக்க முடியாமல் வெளியேறிவிட்டது. 2022 மார்ச் 1ல் அணை பாதுகாப்பு குழு அதிகாரிகள் ஷட்டர் பழுது, அணையின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து பொதுப்பணி துறையினர் அணையினை பலப்படுத்தவும் 9 ஷட்டர்களையும் எடுத்துவிட்டு நவீன முறையில் புதிய ஷட்டர்களை அமைக்கவும் பரிந்துரைத்தனர்.

அடுத்தடுத்து அதிகாரிகள் பார்வையிட்டு வந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு அணையில் நவீன முறையில் ஷட்டர்கள் அமைப்பதற்காக ரூ. 49 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் ஷட்டர்கள் டிசைன் செய்யப்படும் பணி நடந்து வருகின்றது. விரைவில் இப்பணி முடிந்து அடுத்த மழைக்காலத்திலாவது அணையில் தண்ணீர் தேங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மகாலிங்கம், சமூக ஆர்வலர், நவீன முறையில் ஷட்டர் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியினை விரைந்து முடிக்க வேண்டும். ஏனெனில் சமீபத்தில் மழை பெய்தும் அணையில் தண்ணீரை தேக்க முடியவில்லை. ஷட்டர் பழுதால் வெளியேறி விடுகின்றது. ஒருவேளை அதிகமாக தண்ணீர் வந்தால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது.

இதனால் விவசாயம் மட்டுமின்றி குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படுகின்றது. அடுத்ததாக பருவமழை துவங்க உள்ள நிலையில் தண்ணீர் வந்தாலும் இதே நிலைதான் ஏற்படும். தண்ணீரைத் தேக்க வழி இல்லை. எனவே உடனடியாக புதிய ஷட்டர்களை அமைக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us