/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெள்ளத்தில் தரைப்பாலம் போக்குவரத்து பாதிப்பு
/
வெள்ளத்தில் தரைப்பாலம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 23, 2025 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: ஆலங்குளம், அதன் சுற்றுப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வாகைக்குளம் கண்மாய் நிரம்பியது.
கண்மாய் நிரம்பியதால் மறுகால் பாய்ந்த தண்ணீர் ஆலங்குளத்தில் இருந்து ஆப்பனுார் செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கண்மாய் தண்ணீர் ஆப்பனுார் கிராமத்திற்குள் புகாமல் தடுப்பதற்காக கரைப்பகுதியில் தற்காலிகமாக மணல் மூடை அடுக்கி அதிகாரிகள் தடுத்தனர்.
கண்மாய் தண்ணீர் முழுவதும் கீழ ராஜகுலராமன் கண்மாய்க்கு சென்று வருகிறது. தரைப்பாலம் மூழ்கியதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.