
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா ஏப். 3ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.
அலங்காரத்தில் கிருஷ்ணர் திரவுபதி அம்மன் அர்ஜுனன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை முதல் பூ வளர்த்து திடல் தயார் செய்யும் பணி நடந்தது. மாலை 4:00 மணிக்கு அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் சுவாமியின் பின் நகர்வலம் வந்து விழா திடலை அடைந்தனர். பின்னர் ஆண்கள், பெண்கள் திரளானோர் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.