நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் சந்தன மாரியம்மன் கோயிலில் நடந்த பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோயிலில் ஏப். 16ல் கொடியேற்றத்துடன் பூக்குழி திருவிழா துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு வீதியுலா நடந்தது.
12ஆம் திருநாளான நேற்று மதியம் 3:30 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. முன்னதாக பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து சந்தன மாரியம்மனை தரிசித்தனர். பின்னர் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். கோயிலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த சந்தன மாரியம்மனை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.