/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உச்ச விலையில் பூக்கள்: மல்லிகை, கனகாம்பரம் ரூ.3 ஆயிரம்
/
உச்ச விலையில் பூக்கள்: மல்லிகை, கனகாம்பரம் ரூ.3 ஆயிரம்
உச்ச விலையில் பூக்கள்: மல்லிகை, கனகாம்பரம் ரூ.3 ஆயிரம்
உச்ச விலையில் பூக்கள்: மல்லிகை, கனகாம்பரம் ரூ.3 ஆயிரம்
ADDED : நவ 27, 2025 06:20 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பூக்கள் விலை உச்சத்தை தொட்டது.
இரண்டு நாட்கள் முகூர்த்தம் மற்றும் வரத்து குறைவால் பூக்களின் விலை நேற்று அருப்புக்கோட்டையில் உச்ச விலையில் இருந்தது.
ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3 ஆயிரம், கனகாம்பரம் ரூ.3 ஆயிரம், பிச்சி ரூ.ஆயிரத்து 200, முல்லை ரூ.ஆயிரத்து 300, ரோஜா ரூ.500, செவ்வந்தி ரூ.250 விலையாக இருந்தது. பூக்களின் விலை உயர்ந்தாலும் முகூர்த்த நாட்கள் என்பதால் வேறு வழி இன்றி மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.
பூக்களின் வரத்து குறைந்து போனதால் விலை அதிக அளவில் உள்ளது. ஜனவரி மாதம் வரை இதே நிலைதான் நீடிக்கும் என பூ வியாபாரிகள் கூறினர்.