/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிராமிய பாடகி லட்சுமி காலமானார்
/
கிராமிய பாடகி லட்சுமி காலமானார்
ADDED : ஜன 01, 2026 06:19 AM

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த கலைமாமணி விருது பெற்ற கிராமிய பாடகி லட்சுமி 75, உடல் நலக்குறைவால் காலமானார்.
இவர் பருத்திவீரன் படத்தில் 'ஊரோரம் புளியமரம்' என்ற பாடலை பாடி,நடிக்கவும் செய்தார். மாட்டுத்தாவணி, தெனாவட்டு உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.
இதையடுத்து இவருக்கு சர்வதேச தமிழ் பல்கலை சார்பாக முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. 2017ல் உடல் நிலை பாதிக்கப்பட்டது.
பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டத்தில் இருந்தார். நடிகர் கார்த்தி மாதந்தோறும் உதவித்தொகை வழங்கினார்.
தொடர்ந்து 8 ஆண்டாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நேற்று அதிகாலை இறந்தார். ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

