ADDED : செப் 24, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் உலக உணவு தினத்தை முன்னிட்டு ஊர்வலம் நடந்தது.
தாசில்தார் அலுவலகத்தில் துவங்கி கல்லுாரியில் முடிந்த ஊர்வலத்தை மண்டல துணை தாசில்தார் தவசி பாண்டீஸ்வரி முன்னிலையில், கல்லுாரி தலைவர் குணசேகரன் கொடியசைத்து துவங்கி வைத்தார். கல்லுாரி கூட்டுச் செயலாளர் சுவாதி புகழ், பொருளாளர் ராஜசேகரன், கல்லுாரி முதல்வர் சிந்தனா பங்கேற்னர். என்.எஸ்.எஸ்., மாணவிகள் உணவு விழிப்புணர்வு பற்றிய வாசகங்களை பதாகைகளாக ஏந்தி சென்றனர்.
