/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வன குற்றங்களை தடுக்க மலையடிவார ரோடுகளில் போலீஸ் செக் போஸ்ட்டுகள் வன ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
/
வன குற்றங்களை தடுக்க மலையடிவார ரோடுகளில் போலீஸ் செக் போஸ்ட்டுகள் வன ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
வன குற்றங்களை தடுக்க மலையடிவார ரோடுகளில் போலீஸ் செக் போஸ்ட்டுகள் வன ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
வன குற்றங்களை தடுக்க மலையடிவார ரோடுகளில் போலீஸ் செக் போஸ்ட்டுகள் வன ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 10, 2025 04:21 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடுதலை தடுக்க மலையடிவார ரோடுகளில் போலீஸ் செக்போஸ்ட்டுகள் அமைப்பது மிகவும் அவசியமென வன ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் மலையடிவார பகுதிகளான மம்சாபுரம், செண்பகத் தோப்பு, பந்தபாறை, திருவண்ணாமலை, பிள்ளையார்நத்தம் போன்ற பகுதிகளில் பல்வேறு இயற்கை மூலிகைகள், அரிய வகை மரங்கள், ஏராளமான பனை மரங்கள் உள்ளன.
இந்நிலையில் வனத்துறையினரின் கண்காணிப்பையும் மீறி நாட்டு வெடிகுண்டுகளை வைத்து பல்வேறு வனவிலங்குகளை வேட்டையாடும் சம்பவம் தொடர்கதையாகவே நடந்து வருகிறது.
இதில் பெரும்பாலான சம்பவங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசாரே பிடித்து வருகின்றனர்.
வனத்துறையினர் பிடிக்கும் பல சம்பவங்களில் அபராதங்கள் விதிக்கப்பட்டு குற்றம் செய்தவர்கள் விடுவிக்கப்படுவதால் குற்றம் தொடர்கதையாகவே நீடித்து வருகிறது.
மேலும், மம்சாபுரத்திலிருந்து அத்திதுண்டு செல்லும் ரோடு, ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து செண்பகத்தோப்பு, திருவண்ணாமலை, பிள்ளையார் நத்தம் செல்லும் ரோடுகளிலும்
போலீஸ் செக் போஸ்ட் இல்லாததால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் சர்வ சாதாரணமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.
இதனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் வனக் குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதனை தடுக்க மேற்கு தொடர்ச்சி மலைக்கு செல்லும் அனைத்து ரோடுகளிலும் போலீஸ் செக் போஸ்ட் அமைத்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வன ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

