ADDED : செப் 27, 2026 01:06 AM

அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான சாப்டூர் வனச்சரக மலையில் நேற்று மாலை காட்டுத்தீ ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு வனச்சரக பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை வனத்துறையினர் போராடி அணைத்தாலும், சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் வனப்பகுதி மீண்டும் பசுமை அடைந்தது.
இந்நிலையில் நேற்று மதியம் புலிகள் காப்பகத்தின் வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகத்திற்கு இடையே உள்ள பெருமாள் மொட்டை மலையில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்த வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
