ADDED : ஆக 09, 2026 11:25 PM
அ நிறம் | அளவு
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் நேற்று இரவு வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட 2 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது.
நேற்று இரவு 7:00 மணிக்கு சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மாவூற்று மலைப்பகுதி 'பீட் 6' என்ற இடத்தில் காட்டுத்தீ ஏற்பட்டது.
இதேபோல் வத்திராயிருப்பு வனச்சரகத்திற்கு உட்பட்ட நெடுங்குளம் மலைப்பகுதியில் 'பீட் நம்பர் 3' ரத்தினக்கல் என்ற இடத்தில் இரவு 7:00 மணிக்கு காட்டுத் தீ ஏற்பட்டது. கூமாபட்டி, வத்திராயிருப்பு, கான்சாபுரம் பகுதி மக்கள் எளிதாக பார்க்கும் அளவிற்கு காட்டுத்தீ பரவத் தொடங்கியது.
20 பேர் குழுவினர் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
