/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முன்னாள் தலைமை செயலர் இறையன்பு அறிவுரை
/
முன்னாள் தலைமை செயலர் இறையன்பு அறிவுரை
ADDED : ஜூன் 18, 2025 11:24 PM

சிவகாசி: அறிவுக் களஞ்சியமாகதிகழும் நுாலகத்தை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும், என தமிழகஅரசின் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேசினார்.
சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் அகத்தர மதிப்பீட்டு மையம் சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது. கல்லுாரி செயலர் செல்வராஜன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் பாலமுருகன், முன்னாள் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, ஆலோசனை குழு உறுப்பினர் முரளி பங்கேற்றனர்.
தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேசியதாவது:
உயர்கல்வி பயிலும் மூன்றாண்டுகளும் மாணவர்கள் கடின உழைப்போடு உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். அறிவுக் களஞ்சியமாக திகழும் நுாலகத்தை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை மாணவர்கள் முதலாம் ஆண்டு பயிலும் காலத்திலிருந்து மேற்கொள்ள வேண்டும். உழைப்பு விடாமுயற்சி, வெற்றி ஆகியவற்றை மாணவர்கள் தமது தாரக மந்திரமாக கொண்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து ஆங்கிலத்துறை சார்பில் ஆண்டுவிழா மலர் வெளியிடப்பட்டது. கல்லுாரி துணை முதல்வர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.