/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிறப்பால் பதவி கிடைப்பது தி.மு.க.,வில் தான் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

ADDED : அக் 14, 2024 09:07 AM
அருப்புக்கோட்டை: பிறப்பால் பதவி கிடைப்பது தி.மு.க.,வில் தான் என அ.தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசினார்.
அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் யோக வாசுதேவன் தலைமை வகித்தார்.
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், கடந்த சட்டசபை தேர்தலில் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி திமுக ஆட்சியைப் பிடித்தது. வரும் சட்டசபை தேர்தலில் விடியா ஆட்சியை மக்கள் விரட்டியடிக்கும் சூழல் வரும்.
அ.தி.மு.க., விற்கு இனி எழுச்சி காலம். நாட்டு நடப்பே முதல்வருக்கு தெரியவில்லை. உழைப்பால் பதவி கிடைப்பது அ.தி.மு.க., வில் மட்டும்தான். பிறப்பால் பதவி கிடைப்பது தி.மு.க.,வில், என்றார்.
முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பேசியதாவது: கடந்த காலங்களில் அ.தி.மு.க., பலவிதமான சோதனைகளை கடந்து வந்துள்ளது. 7 முறை ஆட்சியைப் பிடித்த இயக்கம் அ.தி.மு.க., தற்போது 8 வது முறையாக ஆட்சியைப் பிடிக்கப் போகிறது.
அ.தி.மு.க., வை வீழ்த்த நினைப்பவர்கள் எல்லாம் வீழ்ந்து போவார்கள் பல பேர் முயன்றும் இயக்கத்தை முடக்க முடியவில்லை என்று பேசினார்.